புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:36 IST)

என்ன ஆச்சு கீர்த்தி சுரேஷுக்கு? புதுப் படங்களை வேண்டாம் என சொல்வது ஏன்?

தமிழ் சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகைகளின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனால் அவரை தேடி நல்ல கதையம்சம் உள்ள கதைகள் வர ஆரம்பித்தன. பெண்குயின், அண்னாத்த என வரிசையாக படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஓடிடியில் ரிலிஸான பெண்குயின் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது கீர்த்தி சுரேஷ்க்கு செல்லும் கதைகளை எல்லாம் அவர் நிராகரித்து வருகிறாராம். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை தவிர புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறாராம். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.