ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (07:17 IST)

கயல் ஆனந்தி நடிக்கும் மங்கை படத்தின் வித்தியாசமான முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

பிரபுசாலமன் இயக்கிய கயல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஆனந்தி அந்த படத்தின் வெற்றியின் காரணமாக கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டு வந்தார். மேலும் சண்டிவீரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்பட பல திரைப் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ராவணக் கோட்டம் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் மங்கை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குபேந்திரன் மீனாட்சி இயக்க, ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரில் ஆனந்தியை பல பல கோணங்களில் பல கைகள் செல்போனில் புகைப்படம் எடுப்பது போல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.