1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (08:02 IST)

கவிதாலயா தயாரிப்பில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் லக்கி சூப்பர் ஸ்டார்!

பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் ஒரு காலத்தில் பிஸியான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ரஜினியை வைத்து பல படங்களை தயாரித்தது. கடைசியாக ரஜினி நடித்த குசேலன் படம் கூட அந்நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆனால் அதன் பின் ஏனோ சினிமா தயாரிப்பைக் கைவிட்டது. இடையில் பாலச்சந்தரும் மரணமடைய, இப்போது அந்த நிறுவனம் தூசு தட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க உள்ளது. ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை தயாரிப்பதன் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் உதய் என்பவர் இயக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்துக்கு ‘லக்கி சூப்பர் ஸ்டார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். படம் குழந்தைகளைக் கவரும் விதமான கலகலப்பான படமாக அமையும் என சொல்லப்படுகிறது.