1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 மே 2024 (07:34 IST)

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் கடந்த வாரம்  வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது.

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் மே 10 ஆம் தேதி  வெளியான நிலையில் இந்த படம் முதல் மூன்று நாட்களில் 15 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார்.

ஆனால் முதல் வாரத்துக்குப் பிறகு ஸ்டார் படத்தின் வசூல் சுத்தமாகப் படுத்துவிட்டதாம்.  இரண்டாவது வாரத்தில் மொத்தமாக 5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இதற்குக் காரணம் படத்தின் கதை இளைஞர்களை(ஒரு சாரார்) தாண்டி பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களைக் கவரவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அரண்மனை 4 படத்தின் ஓட்டம் இந்த படத்துக்கு கடும்போட்டியைக் கொடுத்துள்ளது என்பதும் ஒரு காரணம்.