மர்ம மாளிகைக்குள் சென்று சிக்கிக்கொள்ளும் பிச்சைக்காரன்… எப்படி இருக்கு ‘பிளடி பெக்கர்’ டிரைலர்!
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இது ஒரு பிச்சைக்கார இளைஞனைப் பற்றிய படம் என்று தெரிகிறது.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு பிச்சை எடுக்க செல்லும் கவின், ஒரு நாள் ஒரு மர்ம மாளிகைக்குள் சிக்கிக் கொண்டால் என்னென்ன நடக்கும் என்பதை விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சொல்லும் விதமாக டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைலர் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.