1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (09:29 IST)

இதுக்கு பேரு காதலா? கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாக்சியின் காதலையும் கவின் உதாசீனப்படுத்தி, லாஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்டது அவருடைய இமேஜை பெருமளவு பாதித்தது 
 
கவினுக்கு ஆரம்பத்தில் இருந்த பார்வையாளர்களின் ஆதரவு திடீரென குறைந்தது இந்த விஷயத்தில் தான் என்பதும் அவரை சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விஷயத்தில் இருந்து கவின் ஓரளவு தற்போது தேறி வரும் நிலையில் கஸ்தூரி, கவினின் முக்கோண காதலை மீண்டும் ஞாபகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
 
இன்றைய புரமோ வீடியோவில் அவர் கவினிடம் 'ஒரே நேரத்தில் நான்கு பெண்களை லவ் பண்றது உங்களுக்கு காமெடியா? என்று கேள்வி எழுப்பிய கஸ்தூரி, 'இதே ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களுடன் ஜொள்ளுவிட்டால் அதை காமெடி என்று எடுத்துக் கொள்வீர்களா? என்று கேட்டதும் கவினின் முகம் சுருங்குகிறது. காதல் விஷயத்தில் கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
சேரனும் கவினும் இதுகுறித்து கஸ்தூரியை சமாதானப்படுத்த முயன்ற போதிலும் கஸ்தூரி விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்து வருவதால் கவின் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளார். இந்த விஷயத்தால் இன்றைய நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது