1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 24 அக்டோபர் 2014 (13:53 IST)

இரண்டு நாளில் 25 கோடி - கத்தியின் பிரமாண்ட வசூல்

கத்தி படம் இரு தினங்களில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் வெளியான கத்தி சர்ச்சைகளுடன்தான் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் 2ஜி குறித்து வரும் விமர்சனம் திமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்குக் குறித்து ஏன் பதிவு செய்யவில்லை? இது ஒருதலைபட்சமானது என்றும் கருத்துகள் கூறி வருகின்றனர்.


 
பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களின் ரிசல்டை ஓபனிங்கை வைத்து கணிக்க முடியாது. படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். ஒரு வாரத்துக்குப் பிறகே படம் மக்களுக்கு பிடித்துள்ளதா இல்லையா என்பதை அதன் வசூலை வைத்து கூற முடியும். கத்திக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் இன்றுவரை அரங்கு நிறைந்த காட்சிகளாகதான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
முதல் நாளில் 13 கோடிகள் அளவுக்கு வசூலித்ததாக கூறப்படும் கத்தி முதலிரு தினங்களில் 25 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தயாரிப்பு தரப்பிலிருந்து இதுவரை வசூல் குறித்து எந்த விவரமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.