வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (08:18 IST)

நீங்க மனிதனில்லை மஹான். ரூ.3 கோடி கொடுத்த ராகவா லாரன்சுக்கு நடிகையின் பாராட்டு!

கொரோனா தடுப்பு நிதியாக மிக அதிக தொகை கொடுத்த திரையுலகை சேர்ந்தவராக தல அஜித் நேற்று வரை இருந்த நிலையில் நேற்று மாலை நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூபாய் மூன்று கோடி கொடுத்ததை அடுத்து அவர் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துவிட்டார். ரூபாய் 3 கோடி கொடுத்த ராகவா லாரன்ஸுக்கு திரையுலகிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ராகவா லாரன்ஸ் இந்த மூன்று கோடியை அனைத்து தரப்பினர்களுக்கும் பாகுபாடின்றி பிரித்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூபாய் 50 லட்சமும், நடன இயக்குனர் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சமும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 லட்சமும், ராயபுரம் பகுதியில் வாழும் தினக்கூலி மக்களுக்கு ரூபாய் 75 லட்சம் என பிரித்து கொடுத்துள்ளார் 
 
இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் கொடைத் தன்மையை பாராட்டி நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களை ஒருவருமான கஸ்தூரி தனது டுவிட்டரில் பாராட்டி உள்ளார். ராகவா லாரன்ஸ் ஒரு மனிதர் அல்ல மஹான் என்றும் அவர் இதுபோல் கொடைவள்ளல் செய்வது இது புதிதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது: நடிகர் ராகவா லாரன்ஸ்  போன்ற தன்னிகரற்ற  கொடை வள்ளலை  பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்க  மனிதனில்லை மஹான்.  வாழ்க வாழ்க நீ எம்மான்