1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:06 IST)

சர்ச்சைகளைக் கிளப்பிய காஷ்மீர் பைல்ஸ்…. ஓடிடி பிரிமீயர் தேதி அறிவிப்பு!

சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஆதரவாகப் பேசினர். மேலும் இந்த படம் இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி பிரிமீயர் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடியில் பிரிமீயர் ஆக உள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.