வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (10:48 IST)

கொம்பன் படத்துக்கு சிக்கல் - தடைகேட்டு மனு

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள கொம்பன் மார்ச் இறுதியில் திரைக்கு வரவுள்ளது இந்நிலையில் படத்தின் பெயருக்கும், படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து தணிக்கைக்குழுவிடம் மனு தரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாண் உறவின்முறை சங்கத் தலைவர் கே.சி.செல்வகுமார் என்பவர் கொம்பனுக்கு எதிராக தணிக்கைக்குழுவிடம் மனு ஒன்று அளித்துள்ளார்.
 
ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியில் எங்கள் சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. இந்நிலையில் கொம்பன் என்ற பெயரில் ஒரு படம் வருவதை தொலைக்காட்சி மூலம் அறிந்தோம். முதுகுளத்தூர் பகுதியை களமாகக் கொண்டும், கொம்பன் என்ற கேரக்டர் ஆதிக்கவாசியின் கேரக்டராக சித்தரித்திருப்பதாகவும் அறிந்தோம். எனவே கொம்பன் என்ற தலைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதியின் பின்னணியில் எடுக்கப்பட்டிருப்பதால் படத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.