வலிமை பட வில்லன் நடிகருக்கு திருமணம்! – ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் வில்லனாக நடித்தவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் ஒரு வழியாக படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்மகொண்டா என்பவர் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஹைதாராபாத்தில் கார்த்திகேய கும்மகொண்டாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமண விழாவில் சிரஞ்சீவி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.