விஜய் பட வாய்ப்பை கைநழுவ விட்ட கார்த்திக் சுப்பராஜ்!
விஜய் நடிக்க இருக்கும் விஜய் 65 படத்தின் வாய்ப்பை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நூலிழையில் தவறவிட்டுள்ளாராம்.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விஜய்க்காக ஒரு கதையை சொல்லியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் அப்போது அந்த படத்தை இயக்க முருகதாஸ் ஒப்பந்தமானதால் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம்மை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார். இந்நிலையில் இப்போது முருகதாஸ் விலகியதால் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை விஜய் கார்த்திக் சுப்பராஜ்க்கு கொடுக்கலாம் என நினைத்த நிலையில் கைவசம் ஒரு படம் வைத்திருப்பதால் அந்த வாய்ப்பு நழுவியுள்ளது.