செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:53 IST)

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கார்த்திக்!

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். சமீபகாலமாக இவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் உடல்பயிற்சி செய்துகொண்டிருந்த போது கீழே விழுந்ததால் அவருக்கு காலில் அடிபட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே காலில் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்திருந்ததால் இப்போது வலி அதிகமாகியுள்ளது. மேலும் எலும்பில் விரிசல் விழுந்துள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் இப்போது அவர் வீடு திரும்பியுள்ளார். மேலும் அந்தகன் படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துள்ளாராம்.