வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (17:55 IST)

விஜய் சேதுபதி யார்? ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில்!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்சேதுபதியை யாரென்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறிய பதில் இன்று மிகப் பொருத்தமாக இருப்பதாக ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்
 
கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான ’தென்மேற்கு பருவக்காற்று’ ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டரில் ’விஜய் சேதுபதி நடித்த ’தென்மேற்கு பருவக்காற்று’ படம் ரிலீசாகிறது அவரை பெரிய திரையில் பார்க்க மிகவும் ஆவலுடன் உள்ளேன். அவர் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார் 
 
இந்த ட்விட்டுக்கு கமெண்ட் படித்த ஒரு ரசிகர் விஜய் சேதுபதி யார்? என்று கேள்வி எழுப்பினார் அதற்கு கார்த்திக் சுப்பராஜ் ’இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்’ என்று பதிலளித்தார் 
 
இந்த நிலையில் இந்த ட்விட்டை தற்போது பதிவு செய்துள்ள ஒருவர் ’பத்து ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறிய இந்த கருத்து என்று எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பது புரிய வருகிறது. ஒரு நடிகரின் உண்மையான வளர்ச்சி என்பது இதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது