செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (11:25 IST)

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: பிரபல இயக்குனர்

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறை வெடித்து உள்ளதால் பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் இந்த போராட்டங்களை தூண்டும் வகையில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருவது வருவதாகவும் இதனை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் மிக ஆவேசமாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று குறிப்பிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், மாணவர்கள் மீதான போலீஸ் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டும் என்றால் குடியுரிமை சட்ட மசோதா இந்தியாவிற்கு வேண்டாம் என்றும், இந்த சட்டம் இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கார்த்திக் சுப்புராஜின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதே கருத்தை அமெரிக்காவிலோ அல்லது அரேபிய நாட்டிலிருந்து சொல்ல முடியுமா? என்றும் சிங்கப்பூர் உள்பட மற்ற நாடுகளில் இதனை கார்த்திக் சுப்புராஜ் கடைபிடிக்க முடியுமா என்றும் கூறியுள்ளனர். ஒரு சிலர் இந்த கருத்தை ரஜினியிடம் கூறி பாஜகவிடம் சொல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்