வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (17:39 IST)

வசனமே இல்லாத படத்திற்கு தமிழ் வெர்ஷனா! கார்த்திக் சுப்புராஜின் ஏமாற்றுவேலை?

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழ்த்திரையுலகில் இருந்து எந்த புதிய படமும் வெளியாகாமல் கட்டுக்கோப்பாக வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஒருசில தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படங்களும் வரும் ஞாயிறு முதல் தூக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மெளன படமான வசனமே இல்லாத 'மெர்க்குரி' வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜூக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் 'தயாரிப்பாளர் சங்கத்தின்  வேலைநிறுத்த போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து மெரிக்குரி' படத்தின் தமிழ் வெர்ஷன் வெளியாகாது என்று அறிவித்துள்ளார்.

உண்மையில் வசனமே இல்லாத 'மெர்க்குரி' படத்திற்கு தமிழ் வெர்ஷன் என்றே ஒன்று கிடையாது. கமல்ஹாசனின் 'பேசும் படம்' போல இந்த படத்தின் டைட்டில் மட்டுமே ஒவ்வொரு மொழிக்கும் மாறுபடும். மற்றபடி உலகம் முழுவதும் இந்த படம் மெளன படமாகவே ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் தமிழ் வெர்ஷன் ரிலீஸ் இல்லை என்று கூறிவிட்டு ஆங்கில டைட்டிலில் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் ஏமாற்று வேலையை கார்த்திக் சுப்புராஜ் செய்யப்போவதாக கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இது உண்மையா? என்பது வரும் 13ஆம் தேதி தெரிந்துவிடும்