புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (16:50 IST)

கார்த்திக்காக கதையோடு காத்திருக்கும் இரண்டு இளம் இயக்குனர்கள்!

நடிகர் கார்த்தி இப்போது மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி கைவசம் இப்போது மூன்று பிரம்மாண்ட படங்கள் உள்ளன. பொன்னியின் செல்வன், சர்தார் மற்றும் விருமன் ஆகிய மூன்று படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மதுரையில் நடந்து வருகிறது. இதை முடித்துவிட்டு சர்தார் படத்தை முடிக்க உள்ளாராம். அந்த படத்தை முடித்தபின்னர் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 மற்றும் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

கைதி 2 படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க, அருண் ராஜா காமராஜா இயக்கும் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.