செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 11 மே 2022 (10:23 IST)

சார்தார் அடுத்த அப்டேட் எப்போது? கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ்!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார், முத்தையா இயக்கத்தில் விருமன் மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் என நடித்து வருகிறார். இதில் சர்தார் தவிர்த்து மற்ற இரு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

இப்போது சர்தார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளி நாளில் அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படமும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வரும் மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சர்தார் படத்தின் அடுத்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அல்லது டீசர் என ஏதேனும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.