1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (17:13 IST)

சூர்யா ஹீரோ; கார்த்தி வில்லன்: புதிய படம்?

சூர்யா ஹீரோ; கார்த்தி வில்லன்: புதிய படம்?

நடிகர் கார்த்தி நடித்த காஷ்மோரா திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.


 
 
தெலுங்கில் வெளியான காஷ்மோரா முதல் வார இறுதியில் 15 கோடி வசூல் செய்தது. இதனையொட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடிகர் கார்த்தி படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த படம் குறித்து தனது அண்ணனும் நடிகருமான சூர்யா பாராட்டியது குறித்து கூறி மகிழ்ச்சியடைந்தார்.
 
இதனையடுத்து முழுநேர வில்லனாக நடிப்பீர்களா என்று கார்த்தியிடம் கேள்வி எழுப்பினர் நிரூபர்கள். இதற்கு பதில் அளித்த கார்த்தி முழுநேர வில்லனாக நடிக்க விருப்பமில்லை, ஆனால் அண்ணன் சூர்யா ஹீரோவாக நடித்தால் அந்த படத்தில் முழுநேர வில்லனாக நடிக்க தயார் என கூறினார்.