கார்த்தி ராஜுமுருகன் இணையும் ஜப்பான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
ராஜுமுருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று ஹிட்களைக் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவி நடைபெற்றது.
இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போது அடுத்தகட்ட ஷூட்டிங் கேரள மாநிலம் கோழிக்கூட்டில் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என சொல்லப்படுகிறது.