புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (16:13 IST)

கார்த்தியின் முதல் பேன் இந்தியா படமாக உருவாகும் ஜப்பான்!

கார்த்தி நடிப்பில் ஜப்பான் படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார்.

விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய 3 படங்களை இந்த ஆண்டில் கொடுத்த பிறகு கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவி நடைபெற்றது.

இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் எஸ்ஆர் பிரபு தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படம் தங்க அரசியலை மையப்படுத்தி உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கார்த்தியின் பேன் இந்தியா ரிலீஸாக இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.