திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 மே 2022 (08:52 IST)

25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன்… அன்புப் பரிசு கொடுத்த கார்த்தி

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன யுவன் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடந்தது.

அதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி யுவனுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். இது சம்மந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார்த்தியின் பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி மற்றும் தற்போது உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.