ஜப்பான் இசை வெளியீட்டில் கலந்துகொள்ளும் கார்த்தியுடன் பணியாற்றிய கலைஞர்களுக்கு அழைப்பு!
கார்த்தி நடிப்பில் அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்ச்சியை கார்த்தி 25 என்ற பெயரில் நடத்தும் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை கார்த்தி நடித்த 25 படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அழைக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.