1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (19:46 IST)

கொரோனா எதிரொலி: நடிகை கரீனா கபூரின் வீட்டிற்கு சீல் வைப்பு!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கொரோனா விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பை மாநகராட்சி கூறிய விதிகளை மீறி பல கேளிக்கை கொண்டாட்டங்களில் கரீனாகபூர் பங்கேற்றதால் தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.