திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)

ஹேப்பி பர்த்டே வூட்டுக்காரரே: குக் வித் கனி டுவிட்!

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆன கனி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கனியின் கணவர் இயக்குனர் திரு பிறந்தநாளை அடுத்து அவர் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார் 
 
ஹாப்பி பர்த்டே வூட்டுக்காரரே என்று அவர் குறிப்பிட்டு, பிறந்ததற்கு நன்றி என்று பதிவு செய்து இந்த வசனம் அவரது திரைப்படத்தில் இடம் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கணவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது