’குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் கனிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி நேரம் ஒளிபரப்பானது என்பதும் இறுதியில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக கனி அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா மற்றும் ஷகிலா ஆகியவர்கள் வித்தியாசமான சமையலை செய்த நிலையில் கனி மட்டும் சவுத் இந்தியன் சமையல்தான் செய்திருந்தார் என்பதும் ஆனால் அவருடைய பிரசன்டேஷன் மிகவும் சூப்பராக இருந்ததால் அவருக்கு முதல் பரிசு கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. குக் வித் கோமாளி முதல் சீசனிலும் வனிதா விஜயகுமார் கொடுத்த சிறப்பான பிரசன்டேஷன் காரணமாகவே அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற கனிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி பல்வேறு ஸ்பான்சர் நிறுவனங்கள் வழங்கிய சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருள்களும் அவருக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
சவுத் இந்தியன் சமையலை செய்தாலும் டைட்டில் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் நமது இட்லி தோசையை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றும் டைட்டில் வின்னர் பெற்ற பின்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கனி கூறியுள்ளார்