புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (10:50 IST)

இதுவும் ஜிகாதி தேசம்தான்… வேளாண் சட்ட முடிவு குறித்து கங்கனா!

வேளாண் சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்படும் எனப் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். 

இந்த முடிவு பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மட்டும் தனது எதிர்ப்பை வழக்கம்போல பதிவு செய்துள்ளார். அதில் ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல், தெருவில் சட்டம் இயற்றினால் இதுவும் ஜிகாதி தேசம்தான். இது இப்படி இருக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.