செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:46 IST)

என்னை விட நடிப்பில் சிறந்தவர் உலகிலேயே கிடையாது: கங்கனா ரனாவத்

உலகிலேயே என்னைவிட சிறந்த நடிகை யாரும் இல்லை என கங்கனா ரணாவத் தற்பெருமையுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இயக்குனர் விஜய் இயக்கி வரும் தலைவி என்ற படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வருபவர் கங்கனா ரணாவத். இவர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயம் ரவி நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கங்கனா ரணாவத் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே என்னை போன்று நடிப்பில் வித்தியாசமான தன்மைகளைக் கொண்டவர் யார் இருக்கிறார்? என கேள்வி எழுப்பிய கங்கனா ரணாவத், என்னைவிட நடிப்பில் சிறந்தவர்களை அடையாளம் காட்டினால் என் ஆணவத்தை விட்டு விடுகிறேன் என்று அவர் சவால் விடுத்துள்ளார் 
 
என்னதான் நடிப்பு திறமை அதிகம் இருந்தாலும் தன்னைத்தானே கங்கனா ரனாவத் புகழ்ந்து கொண்டதை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையுடன் இருக்கும் நிலையில், உலகிலேயே சிறந்தவர் நான்தான் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட கங்கனா கண்டனங்கள் குவிந்து வருகிறது