செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (18:17 IST)

டான் ஆகுறதுக்கு இது ஆப்கானிஸ்தான் இல்லை..! – கங்கனா ரனாவத்!

நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரம் குறித்து பேசிய நடிகை கங்கனா ரனாவத் டான் ஆக இது ஆப்கானிஸ்தான் இல்லை என பேசியுள்ளார்.

சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.

எனினும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் பேச தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத் “கருத்து சொல்ல நுபுர் சர்மாவுக்கு உரிமை உள்ளது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகிறது என்பதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். அதை விட்டு டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் அல்ல” என பேசியுள்ளார்.