திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:38 IST)

கங்கனா வெளிநாடு செல்வதில் சிக்கல்… நீதிமன்றம் அளித்த பதில்!

நடிகை கங்கனா ரனாவத் மேல் மும்பை போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய கொரோனா நிலவரம் குறித்து பாப் பாடகி ரிஹானா பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு முதலாக அடிக்கடி இவரது ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதே போல மும்பை மாநில அரசோடு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவர் மேல் மும்பை போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு ஒன்றுக்காக அவர் புதாபெஸ்ட் செல்ல வேண்டி இருந்த நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் மேலும் சகோதரி மேலும் வழக்குகள் இருந்ததால் புதுப்பிக்க இயலவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கங்கனா, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். ஆனால் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துள்ளது. மேலும் அவசரம் என்றால் முன்பே தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும் என கடிந்தும் கொண்டுள்ளது.