1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (08:05 IST)

சந்திரமுகி 2 படத்துக்காக ஹோம் வொர்க் பண்ணும் கங்கனா ரனாவத்!

சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான நடனக் காட்சிக்காக மிகவும் ஈடுபாட்டோடு இப்போது அவர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். முதல் பாகத்தில் எப்படி ஜோதிகாவின் நடனம் பேசப்பட்டதோ அதுபோல இந்த படத்திலும் கங்கனாவின் நடனம் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.