1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (16:36 IST)

ராகவா லாரன்ஸ் படத்தின் நாயகி தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் நடித்து இருந்தனர். அவர்கள் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி.
 
இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்பவர் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அலெக்சாண்ட்ரா ஜாவி சமீபத்தில் தனது காதலருடன் கோவாவில் தங்கியிருந்ததாகவும் அப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது 
இந்தநிலையில் அலெக்சாண்டரியா தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கோவா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் அலெக்சாண்டரியா ஜாவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது