வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (11:40 IST)

வெளிநாடுகளில் பாபநாசம் வசூல் நிலவரம்

பாபநாசம் படத்துக்கு ரசிகர்கள் வருவது அதிகரித்து வருகிறது. படத்தை குறித்து வரும் நேர்மறை விமர்சனங்களால் திரையரங்குகள் நிரம்பத் தொடங்கியிருக்கின்றன. 
 

 
வெளிநாடுகளிலும் படத்தின் முதல் மூன்று நாளுக்கு அதிக ஆரவாரமில்லை. யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 80 திரையிடல்களில் 205,426 டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 1.30 கோடி.
 
கனடாவில் முதல் மூன்று தினங்களில் எட்டு திரையிடல்களில் 19.03 லட்சங்களை வசூலித்துள்ளது.
யுகே மற்றும் அயர்லாந்தில் 21 திரையிடல்களில் 32,059 பவுண்ட்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமாராக 31.71 லட்சங்கள்.
 
மலேசியாவில் முதல் மூன்று தினங்களில் 21 திரையிடல்களில் 39.15 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
இனிவரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.