வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 மே 2018 (18:42 IST)

பிக்பாஸ் 2 டீசர் - டிவிட்டரில் வெளியிடும் கமல்

பிக்பாஸ் 2ஆம் பாகத்திற்கான டீசரை நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை தனது டிவிட்டரில் வெளியிட உள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா மூன்று படங்கள் நடித்துவருகிறார். அதேபோல் ரைசா, ஹரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்திலும், ஜூலி இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றில் அனிதாவின் வாழ்க்கை வரலாற்று  திரைப்படமும் ஒன்று.
 
அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும், நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனைப்போலவே 2 ஆம் சீசனுக்கும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை 5 மணிக்கு பிக்பாஸ் 2-வின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் விஜய் டிவியில் இந்த டீசர் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் 2-வில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.