1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:27 IST)

நான் வேற கட்சி… இளையராஜா வேற கட்சி – பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேச்சு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் சில தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப் பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தொடரின் 6வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஷிவின், அசல் கோளாறு என பலர் கலந்து கொண்டனர். இந்த சீசனின் வின்னராக யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாளில் தொகுப்பாளர் கமலிடம் போட்டியாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். அதில் ராபர்ட் மாஸ்டர் “நண்பர்களோடு எப்படி முரண்படாமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல் “நாடே அப்படி பன்முகத்தன்மையோடுதான் இருக்கணும். நான் சாமி கும்பிட மாட்டேன். ரஜினி கும்பிடுவார். நானும் என் அண்ணன் இளையராஜாவும் மிகவும் நெருக்கம். ஆனால் நிஜமாகவே நான் வேறு கட்சி. அவர் வேறு கட்சி.  அதற்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் வைத்துள்ள அன்புக்கும் நட்புக்கும் சம்மந்தம் இல்லை” எனப் பேசியுள்ளார்.