திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (07:05 IST)

இந்தியன் 2 & 3ஓவர்… தக் லைஃப் எலக்‌ஷனுக்குப் பிறகு… கமல் கொடுத்த அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ராஜ்ய சபா எம் பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கும் கமல் தன்னுடைய படங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்தியன் படத்துக்கான ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குப் பிறகு தக்லைஃப் படத்தில் நடிப்பேன். அதன் பிறகு கல்கி திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.