திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2025 (08:48 IST)

எல்லைகளை விரிவாக்கும் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்… கமல்ஹாசன் பாராட்டு!

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

துபாய் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்ட நிலையில் கடைசி நேரத்தில் அஜித் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அவரது அணியின் மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 24 மணிநேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த அணிகளின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். இதையடுத்து அஜித் குமாருக்கு தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் “தங்களுடைய முதல் ரேஸிலேயே ‘அஜித் குமார் ரேசிங்’ அணியின் அசாதாரணமான வெற்றி இது. நண்பர் அஜித்குமார் தன்னுடைய பலதரப்பட்ட கனவுகளுக்கான எல்லையை விரிவாக்குபவர். இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு இது ஒரு பெருமையான தருணமாகும்’ எனக் கூறியுள்ளார்.