திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (15:16 IST)

கைவிரித்த கமல்ஹாசன்… தனுஷ் படத்தை தொடங்கும் ஹெச் வினோத்!

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கை முடித்துள்ள கமல் அடுத்து பிரபாஸின் கல்கி 2898 மற்றும் மணிரத்னம் இயக்க்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் படத்துக்கு முன்பாகவே அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை.

அதனால் இப்போது கமல் படத்தில் இருந்து ஹெச் வினோத் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. கமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு ஹெச் வினோத் படத்தில் நடிக்க முடியாத சூழலில் உள்ளாராம். அதனால் வினோத், அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டு, பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தொடங்கியுள்ள வினோத், படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.