Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மூஞ்சி ,மொகரக்கட்டை தெரியுமாம், சீர், உரையாடல் தெரியாதாம்! காயத்ரியை கேலி செய்த கமல்


sivalingam| Last Modified ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (22:57 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து ஒருசில கேள்விகள் கேட்டபோது, காயத்ரியிடமும் ஒரு சின்ன உரையாடல் நடத்துவோம் என்று கூறினார்.அதற்கு காயத்ரி உரையாடல் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர் உங்களுக்கு சீர் என்பதற்கே அர்த்தம் தெரியாதே என்று கூறி ஒரு கேலிப்பார்வை பார்த்தார். அந்த பார்வையில் மூஞ்சி மொகரக்கட்டைக்கு அர்த்தம் தெரியும் உரையாடலுக்கு தெரியாதா? என்ற மறைமுக கேள்வி இருந்தது.


 
 
பின்னர் காயத்ரி கூறிய 'ஹேர்' என்ற வார்த்தை குறித்து கமல் கேட்டபோது, 'நான் பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். அப்படி பார்த்தால் ஹேர் என்பது பெரிய கெட்ட வார்த்தை இல்லை' என்று கூறியது காயத்ரி இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டியது.
 
மேலும் கெட்ட வார்த்தை மற்றும்  வெளியே வந்தால் பார்த்து கொள்வேன்' போன்றவற்றை திருத்தி கொள்ளுங்கள் என்றும் இல்லையென்றால் பொதுமக்கள் உங்கள் திருந்த வைப்பார்கள் என்றும் எச்சரித்து அவரை அனுப்பினார்.


இதில் மேலும் படிக்கவும் :