1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (19:53 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு இளம் நடிகர்கள்: கமல் சிபாரிசா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இவர் 96 படத்தில் இளம் விஜய்சேதுபதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்த அபுஹாசன் என்பவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் பிரபல நடிகர் நாசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த இருவரையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள கமல்ஹாசன் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது