1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (20:13 IST)

சூர்யாவின் சிக்கந்தர் ஆடியோ விழா - கமல் கலந்து கொள்கிறார்

அஞ்சான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு பாதுகாப்பு காரணங்களால் அது நடைபெறாமல் போனது. சென்னையில் சாத்தியமாகாமல் போனதை ஹைதராபாத்தில் நடத்தப் போகிறது அஞ்சான் டீம், ஸாரி... சிக்கந்தர் டீம்.
அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை பெரிய தொகைக்கு தயாரிப்பாளர் லகடபதி ஸ்ரீதரால் வாங்கப்பட்டது. தெலுங்கில் அஞ்சானின் பெயர் சிக்கந்தர். படத்தில் சூர்யாவின் கதாபாத்திரங்களில் ஒன்றின் பெயர் சிக்கந்தர். அதனையே தெலுங்கில் படத்தின் பெயராக்கியுள்ளனர். 
 
அஞ்சான் வெளியாகும் அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிக்கந்தரும் வெளியாகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா ஜுலை 31 ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நாகார்ஜுன், அல்லு அர்ஜுன் ஆகியோருடன் கமலும் கலந்து கொள்கிறார்.
 
சிக்கந்தருக்கு யுவன் இசையமைத்துள்ளார். தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.