Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னை ஆரம்பிக்க வச்சிராதிங்க! கமல் எச்சரிக்கை


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (22:05 IST)
கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல் தொடுத்துள்ள டுவிட்டர் போரால் அமைச்சர்கள் கதிகலங்கி இருக்கின்றார். கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுப்பது போல் அறிக்கைகள் அமைச்சர்களிடம் இருந்து வந்தாலும், கமல் கூறும் வார்த்தைகளுக்கு உள்ள மதிப்பில் பாதி கூட அமைச்சர்களின் பதிலுக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கவில்லை


 
 
இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல், 'நான் இதுவரைக்கும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால் தயவுசெய்து என்னை வரவச்சிடாதீங்க என்றார்.
 
மேலும் எனக்கு இருக்கும் அனுபவத்தை  வைத்து நான் பிலிம் இன்ஸ்டிடியூட் தொடங்கினால் சிறப்பாக நடத்துவேன். அதேபோல் ஒரு எஞ்சினியர் பிடபிள்யூடி அமைச்சராகவோ, ஒரு டாக்டர் சுகாதார துறை அமைச்சராகவோ, ஒரு சட்டம் படித்து ஹார்ட்வேர்டில் பேராசிரியர் பணிபுரிபவர் சட்ட அமைச்சராக வந்தால் நன்றாக இருக்கும் என்று கமல் மேலும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :