Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம்: கமலின் புதிய டுவீட்


sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (00:45 IST)
இப்போதெல்லாம் கோலிவுட் பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடுவதை ஒரு டிரெண்டாக வைத்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு நாளும் நள்ளிரவிலும் ஒரு டுவீட்டை தட்டி விடுவதை உலக நாயகன் கமல்ஹாசன் டிரெண்ட் உண்டாக்கி வருகிறார். இன்னும் சில நாட்களில் அனைவரும் தூங்க போவதற்கு முன்னர் அவருடைய டுவிட்டர் பக்கத்தை ஒரு முறை செக் செய்துவிட்டுத்தான் செல்வர்.


 
 
இந்த நிலையில் இன்றும் அவர் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த முறை அவர் டுவிட்டியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றியது.
 
நேற்றைய நள்ளிரவு திடீரென சென்னை மெரீனாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கமல், 'சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால்  என் அப்பா' என்று பதிவு செய்துள்ளார். நல்லவேளை இந்த டுவீட்டாவது அனைவரும் புரியும்படி போட்டாரே என்று ஒருபுறம் சந்தோஷமாக இருக்கின்றது. நீதிமன்றத்தின் ஆணையால் சிவாஜி சிலை அகற்றப்பட்டதால் இதுகுறித்து கமல் எந்தவித சர்ச்சைக்குரிய, கேலிக்குரிய கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :