அன்புத்தம்பு உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: கமல்ஹாசன் டுவிட்
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை அடுத்து திமுகவினர் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவரும், எங்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முயற்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவரும், என் அன்புத் தம்பியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது
Edited by Siva