செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (11:16 IST)

கமலுக்காக ரத்து செய்யப்பட்டதா கபாலி ப்ரீவியூ...?

கமலுக்காக ரத்து செய்யப்பட்டதா கபாலி ப்ரீவியூ...?

பிரபல ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள அந்த செய்தியைதான் அனைவரும் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.


 
 
கமல், ரஜினி நட்பு நாடறிந்தது. ரஜினியின் பல படங்கள், கமல் பார்த்து, அவரது கருத்து தெரிந்த பின்தான் வெளியாகியிருக்கிறது. முக்கியமாக கோச்சடையான் படத்தை கமலுக்கு திரையிட்டு காட்டிய பிறகே திரையிட அனுமதித்தார் ரஜினி. இந்தப் பின்னணியில் ஆங்கில இணையதளத்தின் செய்தி முக்கியமாகிறது.
 
கபாலி படத்தை கமலுக்கு திரையிட்டு காட்ட விரும்பியிருக்கிறார் ரஜினி. அதற்குள் எதிர்பாராதவிதமாக கமல் விபத்தில் சிக்கி கால் எலும்பை முறித்துக் கொண்டார். கமலுக்கு படத்தை திரையிட்டு காட்டிய பிறகே பிற நண்பர்களுக்கு படத்தை திரையிடுவது என்று ரஜினி முடிவெடுத்ததால், அவர் திட்டமிட்டிருந்த ப்ரீவியூவை அவரே ரத்து செய்ததாகவும், கமல் உடல்நலம் திரும்பியதும் அவருக்கு பிரத்யேகமாக படத்தை திரையிட இருப்பதாகவும் அந்த ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆனால், சமீபத்திய செய்தி, கபாலி படத்தை இன்று ரஜினி அமெரிக்காவில் பார்க்கிறார். மேலும், தாணுவுக்கும் கமலுக்கும் இடையே தீராப்பகை உள்ளது. ஆளவந்தான் படத்தில் தொடங்கிய இந்த பகையை ஒவ்வொரு படத்தின் போதும் கூர்மழுங்காமல் பார்த்து வருகிறார் தாணு. கிடைக்கிற கேப்பிலெல்லாம் கமலை மட்டம் தட்டும் அவர் தனது தயாரிப்பில் உருவான படத்தை கமலுக்கு பிரத்யேகமாக காண்பிப்பாரா என்றும் கோடம்பாக்கத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.
 
ஆங்கில இணையதளம் அவசரப்பட்டுவிட்டதோ?