1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:50 IST)

தனது மகளின் படத்திற்கு உதவும் கமல்ஹாசன்! ரசிகர்கள் ஆர்வம்

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன். இவர் தன் தந்தையைப் போல் திறமையுடையவராகப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே  அஜித்தின்  விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் உள்ளிட்ட தனது தனித்த  நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ''அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’' என்ற படத்தில் நடித்து வருகிறார் அவர்.

இப்படத்தை ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் அக்‌ஷராஹாசன் சிறப்பாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசனை அக்‌ஷராவின் சகோதரி ஸ்ருதிஹாசன் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை நடிகர் கமல்ஹாசம் வரும் 12 ஆம் தேதிமாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.