1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:03 IST)

கமல்ஹாசனின் '237 'வது படம் பற்றி வெளியான அறிவிப்பு!

kamal 237
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரது கமல்237 என்ற படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர்  நடிகர், பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இந்தியன் -2 படத்தில் நடித்துள்ள நிலையில், இப்பட வேலைகள் நடந்து வருகிறது விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

அதேபோல், மணிரத்னத்துடன் இணைந்து தக்லைஃப் என்ற படத்தில் கமல் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில், ஆர்.ஆர்.ஆர், லியோ உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சண்டை இயக்குனர்களாக பணியாற்றிய அன்பறிவ்  என்று அழைக்கப்படும், அன்புமணி மற்றும் அறிவுமணி ஆகிய சகோதர்கள்  இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் கமல்  நடிக்கவுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 237 வது படமாக இது உருவாகவுள்ளதாகவும், இப்படத்தை அன்பறிவ் இயக்கவுள்ளதாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேசனல் இன்று ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே படத்தின் சண்டைகாட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த அன்பறிவ் ஆகியோரர் இயக்குனர் அவதாரம் எடுத்து, இயக்கவுள்ள கமலின் இப்படம்  ஆக்சன் படமாக உருவாகவுள்ளதால்  எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் வரும் 2025 ல் வெளியாகவுள்ளது.

விரைவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிகிறது.