திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:38 IST)

சிம்புவின் #STR48 பட போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய கமல்ஹாசன்!

simbu -str48
நடிகர் சிம்புவின் பிறந்த நாளின்போது STR48  படத்தின் புதிய முக்கிய அப்டேட் வெளியாகும் என ராஜ்கமல் இன்டர்நேசனல்  தெரிவித்த நிலையில் இப்படத்தின் முதல்லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான  மாநாடு, பத்து தல ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
 
இதையடுத்து,  கமலின் ராஜ்கமல் இண்டர்நேசனல் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இதையடுத்து, சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதா ராஜ்கமல் இண்டர்நேசனல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு, நடிகர் சிம்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு Blood and Battle  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் சிம்புவின் போஸ்டர் வைரலாகி வருகிறது. இப்படம் சிம்புவின் கேரியலில் வித்தியாசமான படமாக அமைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து மகேந்திரன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.