செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

விபத்து நடந்தால் சாலையை மூட முடியுமா? ‘இந்தியன் 2’ விபத்து குறித்து கமல்

விபத்து நடந்தால் சாலையை மூட முடியுமா?
இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ஒரு கோடி ரூபாய் படக்குழுவினர் வழங்கியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
பெப்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விபத்தில் மரணமடைந்த மூன்று பேர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூபாய் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது 
 
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் ’சாலையில் விபத்து நடந்தால் சாலையை மூடி விடுவது இல்லை. அதே போல் படப்பிடிப்பின் போது விபத்து நடந்தால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிமேல் விபத்து நடக்காத வண்ணம் கவனமாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார் 
 
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் ஷங்கர் ’இனிமேல் படப்பிடிப்பு நடக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்படுவோம் என்றும் இனிமேல் படப்பிடிப்பில் விபத்துக்கள் நடக்காத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டுதான் படப்பிடிப்பைத் தொடங்குவோம்’ என்றும் தெரிவித்துள்ளார்