வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (07:58 IST)

விமர்சகர்கள் மேல் வழக்குப் பதிவு செய்த கல்கி படக்குழு… 25 கோடி நஷ்ட ஈடு தரணுமாம்!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த வசூல் விவரங்கள் தயாரிப்பாளர்களால் இட்டுக்கட்டி சொல்லப்படுவதாக விமர்சகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இப்படி தெரிவித்த மும்பையைச் சேர்ந்த சுமித் கடேல் மற்றும் ரோஹித் ஜெய்ஸ்வால் அகியோர் மீது கல்கி படக்குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் தங்கள் கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.